/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாணவனுக்கு தொல்லை வாலிபருக்கு 'போக்சோ'
/
மாணவனுக்கு தொல்லை வாலிபருக்கு 'போக்சோ'
ADDED : செப் 12, 2024 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராயபுரம், ராயபுரம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன், அப்பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன், தன்னுடன் படிக்கும் மாணவனுடன் பள்ளி வளாகத்தில் விளையாடச் சென்றார்.
அப்போது, உடன் படிக்கும் அந்த மாணவனின் அண்ணன், சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
நேற்று முன்தினம் சிறுவனுக்கு, ஆசனவாயில் வலி ஏற்படவே, பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து, சிறுவனிடம் அத்துமீறிய காசிமேடை சேர்ந்த ஜெகதீஸ், 19, என்பவரை, 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

