ADDED : செப் 10, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி,
ஆவடியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். அடிக்கடி மொபைல் போனில் பேசியதால், பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில், கடந்த 4ம் தேதி, சிறுமி வீட்டில் இருந்து மாயமானார்.
பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், ஆவடி டேங்க் பேக்டரி போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர்.
விசாரணையில், அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்த பெரியசாமி, 19, என்ற இளைஞரை, சிறுமி காதலித்து வந்தது தெரிந்தது. அரியலுார் சென்ற போலீசார் சிறுமியை மீட்டனர்.
ஆவடி அனைத்து மகளிர் போலீசார், பெரியசாமியை நேற்று 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.