/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நேர்மை ஆட்டோ ஓட்டுனருக்கு போலீசார் பாராட்டு
/
நேர்மை ஆட்டோ ஓட்டுனருக்கு போலீசார் பாராட்டு
ADDED : மே 29, 2024 12:11 AM

திருமங்கலம், திருமங்கலத்தில் உள்ள, மத்திய அரசு குடியிருப்பில் வசிப்பவர் விகாஷ் மாலிக். இவர், நுங்கம்பாக்கத்திலுள்ள மத்திய அரசின் ஜி.எஸ்.டி., அலுவலகத்தில், கண்காணிப்பாளராக பணிபுரிகிறார்.
இவர், நேற்று முன்தினம் இரவு, நுங்கம்பாக்கத்தில் இருந்து திருமங்கலத்திற்கு, ஆட்டோவில் சென்றார். வீட்டில் தேடியபோது, இவரது மடிக்கணினி காணாமல் போனது தெரிந்தது. இதுகுறித்து அவர், திருமங்கலம் போலீசில் இரவு, 10:00 மணியளவில் புகார் அளித்தார்.
இதற்கிடையில், ஆட்டோ ஓட்டுனரான ஆனந்த், நுங்கம்பாக்கத்திற்கு வந்த போது, ஆட்டோவில் மடிக்கணினி இருந்துள்ளது. உடனே, மீண்டும் திருமங்கலம் வந்து, உரியவரை தேடியுள்ளார். கண்டுபிடிக்க முடியாததால், திருமங்கலம் போலீசில் ஒப்படைத்தார்.
பின், காவல் நிலையத்தில் இருந்த விகாஷ் மாலிக்கிடம், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புகுமார் முன்னிலையில், ஆட்டோ ஓட்டுனர் மடிக்கணினியை வழங்கினார். சில மணிநேரத்தில் மடிக்கணினியை போலீசில் ஒப்படைத்த, ஆட்டோ ஓட்டுனரின் நேர்மையை, போலீசார் பாராட்டினர்.