ADDED : பிப் 23, 2025 12:26 AM

ஏழுகிணறு, துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்தவர் அருண்குமார், 27. இவர், கொண்டித்தோப்பில் உள்ள காவலர் குடியிருப்பில் தங்கி, பூக்கடை காவல் நிலையத்தில் பணியாற்றினார்.
அருண்குமாருக்கு, சிவகாசியை சேர்ந்த அஷ்விதா என்ற பெண்ணுடன், கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. தற்போது அஷ்விதா, நான்கு மாதம் கர்ப்பமாக உள்ளதால், தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று ஊருக்கு சென்று சென்னை திரும்பிய அருண்குமார், நேற்று இரவு பணிக்கு வராததால், பூக்கடை போலீசார் அவரது மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டனர்.
அப்போது அவர் போனை எடுக்காததால், அவரின் வீட்டிற்கு சென்று கதவை தட்டிப்பார்த்தனர். கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த போலீசார், கதவை உடைத்து பார்த்தபோது, அருண்குமார் மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
ஏழுகிணறு போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், அருண்குமாரின் மனைவி அஷ்விதா, கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, ஏழுகிணறு போலீசில் கொடுத்த புகாரின்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.