ADDED : மே 10, 2024 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எம்.கே.பி., நகர், கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன், 42. இவர், எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வந்தார்.
கடந்த 2022ல் சிறுமியரிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக, கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினரால், 'போக்சோ' சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இளங்கோவன் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன், அவரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.