ADDED : ஜூலை 01, 2024 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போரூர்:தாம்பரம் -- மதுரவாயல் புறவழிச்சாலையில் போரூர் அருகே, போரூர் போலீஸ்காரர் திருநாவுக்கரசு என்பவர், ரோந்து பணியில் இருந்தார்.
அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற சோதனை செய்த போது, பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று, திருநாவுக்கரசு மீது மோதிவிட்டு, நிற்காமல் வேகமாக சென்றது.
இதில் காயமடைந்த அவரை அங்கிருந்தோர் மீட்டு, அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து, ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் போரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.