/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பணியில் இருந்த காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு
/
பணியில் இருந்த காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு
ADDED : செப் 04, 2024 01:15 AM

மீனம்பாக்கம்:மாடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரவிகுமார், 59; மீனம்பாக்கம் காவல் நிலைய தலைமை காவலர்.
மீனம்பாக்கம் மேம்பாலம் அருகே, போலீஸ் வாகன சோதனை மையத்தில், நேற்று பணியில் ஈடுபட்டார். அதில், மயங்கிய நிலையில் கிடந்தார்.
அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் தகவலயைடுத்து, ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டது. டாக்டர் மற்றும் மருத்துவக் குழு பரிசோதனை செய்த போது, திடீர் மாரடைப்பால் அவர் உயிரிழந்தது தெரிந்தது.
இதையடுத்து, ரவிகுமார் உடலை, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பினர். மீனம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
இறந்த காவலர் ரவிகுமாரின் மனைவி சித்ரா, 53; அரசு பள்ளி ஆசிரியை. மகன் விக்னேஷ், 30, பி.டெக்., படித்து வேலை தேடி வருகிறார்.