/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெரினா மணற்பரப்பில் முளைத்த திடீர் கடைகள்
/
மெரினா மணற்பரப்பில் முளைத்த திடீர் கடைகள்
ADDED : மே 13, 2024 02:03 AM

அண்ணா சதுக்கம்:சென்னை, மெரினாவிற்கு தினந்தோறும் 1,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். பொதுமக்களுக்கு ஏதுவாக மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில், ஏராளமான கடைகள் உள்ளன. குளிர்பான கடைகள், மீன் வகை சாப்பாடு கடைகள் உள்ளன.
இந்த கடைகளுக்கு மாநகராட்சி வாடகை நிர்ணயம் செய்துள்ளன. இந்த கடைகள் முறையாக தணிக்கை செய்யப்பட்டு, மாநகராட்சி நிர்வாகம் கண்காணித்து வருகிறது. இந்த நிலையில், கடல் மணற்பரப்பில் கடைகள் அமைக்க மாநகராட்சி அனுமதி அளிக்கவில்லை என தெரிகிறது.
ஆரம்பத்தில், மணற்பரப்பில் ஓரிரு கடைகள் இருந்தன. தற்போது, 20க்கும் மேற்பட்ட கடைகள் அங்கு அமைக்கப்பட்டு உள்ளன. மணற்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள கடைகளால், அங்கு வரும் சிலர் மது அருந்தவும் வாய்ப்புள்ளது.
சிறிய கொட்டகை போட்டு கடைகள் இருப்பதால், மறைவிட பகுதியாக உள்ளன. இதனால், சமூக விரோத செயல்களும் நடைபெற வாய்ப்புள்ளதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பட்டினப்பாக்கம் லுாப் சாலையில் ஆரம்பத்தில் சிறிய உணவகங்கள் ஒன்று, இரண்டு அமைக்கப்பட்டன. அதன்பின், சாலையை ஆக்கிரமித்து பல கடைகள் உருவாகின. கடந்த சில நாட்களுக்கு முன் மாநகராட்சி அதிகாரிகள், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றியது குறிப்பிடத்தக்கது.