/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சரக்கு கையாளுதலில் துறைமுகம் சாதனை
/
சரக்கு கையாளுதலில் துறைமுகம் சாதனை
ADDED : பிப் 26, 2025 12:23 AM

சென்னை,
சென்னை துறைமுகம், தொடர்ந்து நான்கு நாட்களாக, தலா 2 லட்சம் டன்னுக்கும் அதிகமான சரக்குகளை கையாண்டு சாதனை புரிந்துள்ளது.
சென்னை துறைமுகத்தில் இருந்து கார்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.
வெளிநாடுகளில் இருந்து இயந்திரங்கள், மருந்து பொருட்கள், மின்னணு மற்றும் மின்சார சாதனங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், பிப்., 20 முதல் 23ம் தேதி வரை தொடர்ந்து நான்கு நாட்கள் மிக அதிக அளவாக, தலா லட்சம் டன்னுக்கு அதிகமாக சரக்குகளை கையாண்டு, துறைமுகம் சாதனை படைத்துள்ளது.
இதன்படி, 20ம் தேதி 2.06 லட்சம் டன், 21ம் தேதி 2.31 லட்சம் டன், 22ம் தேதி 2.46 லட்சம் டன், 23ம் தேதி 2.31 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டு உள்ளன.
ஆட்டோ மொபைல் ஏற்றுமதியும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த 22ம் தேதி, எம்.வி. கிராண்ட் ஹீரோ, எம்.வி.கிராண்ட் மார்க் ஆகிய கப்பல்களில் ஆட்டோ மொபைல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
கடந்த 20ம் தேதி நிலவரப்படி, 6,256 டிரைலர்கள் கையாளப்பட்டுள்ளது. இதற்கு முன், மிக அதிகபட்சமாக 2023 ஜூன் 1ல், 6,087 டிரைலர்கள் கையாளப்பட்டன.
இந்த சாதனையை நிகழ்த்தியதற்காக, துறைமுக அதிகாரிகள், ஊழியர்கள், ஏஜன்ட்டுகள் ஆகியோருக்கு, சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் பாராட்டு தெரிவித்துள்ளார்.