/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போரூர் ஈர நில பசுமை பூங்கா திறப்பு
/
போரூர் ஈர நில பசுமை பூங்கா திறப்பு
ADDED : மார் 09, 2025 01:14 AM

போரூர், வளசரவாக்கம் மண்டலம், போரூர் செட்டியார் அகரம் சாலையில் தனியார் மருத்துவமனை வளாகத்தில், 16.60 ஏக்கர் அரசு நிலம் இருந்தது.
இந்த நிலத்தை மீட்டு, 15.75 கோடி ரூபாய் மதிப்பில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில், ஈரநில பசுமை பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து வந்தன.
இந்த பூங்காவில் 103 இருக்கைகள், நடைபாதை, செங்கல் நடைபாதை, கருங்கல் நடைபாதை, கூடைப்பந்து விளையாட்டு மைதானம், அனைத்து வகையான விளையாட்டு மைதானம், 6.85 ஏக்கர் அளவில் ஏரி, திறந்தவெளி உடற்பயிற்சி மைதானம், பார்க்கிங் வசதி, கழிப்பறை வசதி, கடைகள், மின்விளக்கு உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன், இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
பூங்காவை முதல்வர் ஸ்டாலின் காணொளிகாட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.