ADDED : மார் 10, 2025 12:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி.நகர், தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில், தி.நகரில் நேற்று நடந்த, ஆறாவது மகளிர் தின விழாவில், மாநிலம் முழுதும் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட பெண் பணியாளர்கள் பங்கேற்றனர்.
விழாவில், ஊழியர்கள், அவர்களின் குழந்தைகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தேசிய அஞ்சல் ஊழியர் சங்க முன்னாள் பொது செயலர் பாபு, இந்திய யோகா சங்கம் உறுப்பினர் இளங்கோவன், டாக்டர் அர்சனா மது உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினார்.
மாநில செயலர்கள் சுகுமாரன், சுதீஷ்குமார், மகளிர் ஒருங்கிணைப்பாளர் கீதா உள்ளிட்டோர், மதுரை கோட்ட நிர்வாகி பிரியாக உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.