/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பேக்கரி பொருட்கள் தயாரிக்க பயிற்சி
/
பேக்கரி பொருட்கள் தயாரிக்க பயிற்சி
ADDED : ஏப் 23, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி, ஈக்காட்டுதாங்கல் 'சிட்கோ' தொழிற்பேட்டையில், நாளை துவங்கி வரும் 26ம் தேதி வரை, மூன்று நாட்கள் நடக்க உள்ளது.
இந்த பயிற்சி முகாமில், பேக்கரி பொருட்களின் மூலப்பொருட்கள், உபகரணங்கள், பயன்படுத்தக்கூடிய இயந்திரங்கள் உள்ளிட்டவை இடம் பெறுகின்றன. கராச்சி பிஸ்கட், பன், இனிப்பு வகைகள் தயாரிப்பது குறித்து, பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பத்தாம் வகுப்பு முடித்த 18 வயது மேற்பட்ட ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு www.editn.in என்ற இணையதள முகவரியிலும், 86681 02600, 70101 43022 ஆகிய மொபைல் போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

