/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்
/
சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்
ADDED : ஜூன் 03, 2024 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரும்பாக்கம், ஜூன் 3-
மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கம், எழில் நகர், பிளாக் 39ல் வசிப்பவர் சேகர், 30. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், இரு வீட்டார் சம்மதத்துடன், நேற்று காலை திருமணம் நடக்க இருந்தது.
காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று தகவல் வந்தது. இதையடுத்து பெரும்பாக்கம் போலீசார் அங்கு சென்று, திருமணத்தை நிறுத்தி, சிறுமியை மீட்டனர். பின் மாவட்ட குழந்தைகள் நல காப்பக அதிகாரிகள் வந்து, சிறுமியை காப்பகத்திற்கு அழைத்துச் சென்றனர்.