ADDED : ஜூன் 22, 2024 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல், சர்க்கரை நோயால் உடல் நலம் பாதிக்கப்பட்ட கைதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சூளைமேடு, அண்ணா நெடும்பாதை பகுதியை சேர்ந்தவர் நடராஜன், 56; அவர், கடந்தாண்டு ஜூன் மாதம், முத்தியால்பேட்டை போலீசாரிடம், கஞ்சா வழக்கில் சிக்கி, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சர்க்கரை நோயால் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், கடந்த, 4ம் தேதி, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இரவு உயிரிழந்தார். இது குறித்து புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.