/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஜி.ஹெச்.,சில் இருந்து கைதி தப்பியோட்டம்
/
ஜி.ஹெச்.,சில் இருந்து கைதி தப்பியோட்டம்
ADDED : மார் 01, 2025 01:13 AM

சென்னை, ராயப்பேட்டை, பி.எம்., தர்கா குடிசை பகுதியைச் சேர்ந்தவர் அண்டா சீனு, 26. இவர், ராயப்பேட்டை காவல் நிலைய பழைய குற்றவாளி.
கொலை முயற்சி வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டவர், ஜாமினில் வெளியே வந்து தலைமறைவானார். வழக்கு விசாரணைக்கு, நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அண்டா சீனுவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
வெகுநாட்களாக தேடப்பட்டு வந்த சீனுவை, நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர்.
நேற்று மதியம் மருத்துவ பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, திடீரென தப்பி ஓடிவிட்டார்.
அவரை பிடிக்கும் பணியில் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.