தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ எம்.டி.சி., பணிமனைகளில் ஆர்ப்பாட்டம்

எம்.டி.சி., பணிமனைகளில் ஆர்ப்பாட்டம்

எம்.டி.சி., பணிமனைகளில் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூன் 15, 2026 07:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2026 07:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: காலி பணியிடங்களை நிரப்பக்கோரி, மாநகர போக்குவரத்து கழக பணிமனைகள் முன், சி.ஐ.டி.யு., சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.

எம்.டி.சி., என்ற சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில், 3,400க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஓட்டுனர், நடத்துனர் உட்பட 18,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.

காலி பணியிடங்களை நிரப்பாததால், 230க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளன. இதனால், பணிக்கு வரும் நடத்துனர் அல்லது ஓட்டுனருக்கு மாற்று பணி வழங்காமல், பணி மறுக்கப்படுகிறது.

எனவே, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு., சார்பில், பணிமனைகள் முன் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us