ADDED : ஆக 09, 2024 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மீனம்பாக்கம், ஆலந்துார் மண்டலம், 159வது வார்டுக்கு உட்பட்ட மீனம்பாக்கம் ஆதிதிராவில் நல மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ - மாணவியருக்கு, தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி, பள்ளி அரங்கத்தில் நேற்று நடந்தது.
பல்லாவரம் எம்.எல்.ஏ., கருணாநிதி பங்கேற்று, 76 மாணவ - மாணியருக்கு சைக்கிள்களை வழங்கினார்.
அவர் பேசுகையில், ''இந்த ஆண்டு முதல் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெறும் மாணவ - மாணவியருக்கு முறையே, 10,000, 7,000, 3,000 ரூபாய் வழங்கப்படும்,'' என்றார்.