/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காங்கிரசார் -- போலீசார் இடையே தள்ளுமுள்ளு
/
காங்கிரசார் -- போலீசார் இடையே தள்ளுமுள்ளு
ADDED : ஜூலை 11, 2024 12:42 AM

சென்னை,
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகையை அவதுாறாக பேசிய பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து, தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், 92வது வார்டு கவுன்சிலர் கே.வி திலகர் தலைமையில், நொளம்பூரில் நேற்று மாலை கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட காங்கிரசார் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் அண்ணாமலையின் புகைப்படங்களை கிழித்து எறிந்து கண்டன கோஷமிட்டனர்.
போலீசார் அதனை தடுக்க முயன்ற போது, காங்கிரசாருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி சிறிது நேரம் களேபரமானது.
அதேபோல, வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டில்லிபாபு தலைமையில், வியாசர்பாடியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, அண்ணாமலையின் புகைப்படத்தை தீயிட்டு கொளுத்தி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் சமரச பேச்சு நடத்தியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இச்சம்பவங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.