தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இறுதி போட்டிக்கு தகுதி

இறுதி போட்டிக்கு தகுதி

இறுதி போட்டிக்கு தகுதி


ADDED : மே 09, 2026 07:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2026 07:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இரண்டாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டியில், பன்ட்ஸ் சி.சி., – எழும்பூர் ஆர்.சி., அணிகள் எதிர்கொண்டன. முதலில் பேட்டிங் செய்த பன்ட்ஸ் சி.சி., அணி, 70 ஓவர்களில், 303 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தொடர்ந்து களமிறங்கிய எழும்பூர் ஆர்.சி., அணி, 71.3 ஓவர்களில், நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு, 305 ரன்கள் குவித்து, முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

மற்றொரு அரையிறுதியில், பிரைஷ்டன் சி.சி., – எழும்பூர் ஆர்.சி., அணிகள் மோதின. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பிரைஷ்டின் சி.சி., அணி, 89 ஓவர்களில், 385 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பின், இலக்கை துரத்தி களமிறங்கிய தி.நகர் அணி, 59 ஓவர்களில், 169 ரன்களுக்கு சுருண்டது. இதனால், பிரைஷ்டின் சி.சி., அணி 216 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இதன் இறுதிப்போட்டி, ஜோன்ஸ் கிரிஷ் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. இதில், எழும்பூர் ஆர்.சி., அணி, பிரைஷ்டின் சி.சி., அணியை எதிர்த்து விளையாடுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us