/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கத்திமுனையில் வழிப்பறி ஆர்.ஏ.புரம் வாலிபர்கள் கைது
/
கத்திமுனையில் வழிப்பறி ஆர்.ஏ.புரம் வாலிபர்கள் கைது
கத்திமுனையில் வழிப்பறி ஆர்.ஏ.புரம் வாலிபர்கள் கைது
கத்திமுனையில் வழிப்பறி ஆர்.ஏ.புரம் வாலிபர்கள் கைது
ADDED : மார் 04, 2025 08:40 PM
சென்னை:ராஜா அண்ணாமலைபுரம், நாராயணசாமி தோட்டம் 1வது தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ், 37; பிளம்பர். கடந்த 1ம் தேதி இரவு சேமியர்ஸ் சாலை வழியாக நடந்து சென்றார். அப்போது, மர்மநபர்கள் நான்கு பேர் அவரை வழிமறித்தனர்.
அதில் ஒருவர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது வயிற்றில் வைத்து, 1,500 ரூபாயை பறித்தது மட்டுமல்லாமல், கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.
இது குறித்து அபிராமபுரம் போலீசார் விசாரித்தனர். இதில், ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார், 26, சிவகுமார், 25, கார்த்திக், 28, தினேஷ், 21, ஆகிய நான்கு பேர், பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.