/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெரியபாளையத்தில் சோதனை கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
/
பெரியபாளையத்தில் சோதனை கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
பெரியபாளையத்தில் சோதனை கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
பெரியபாளையத்தில் சோதனை கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
ADDED : ஜூலை 13, 2024 12:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியபாளையம், திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில், ஹோட்டல்கள், குளிர்பான கடைகள், டீக்கடைகள் ஆகியவற்றில் நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதில் ஐந்து உணவகங்களில் கெட்டுப்போன மாட்டு இறைச்சி 25 கிலோ, ஆட்டு இறைச்சி 10 கிலோ, கலர் பவுடர் கலந்த கோழிக்கறி 25 கிலோ, பிரியாணி 150 கிலோ, கலப்பட டீத்துாள் 5 கிலோ, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 10 கிலோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற இரண்டு கடைகளுக்கு 4,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.