/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓட்டுனர்களுக்கு விரிவான வசதி ரயில்வே அதிகாரிகள் தகவல்
/
ஓட்டுனர்களுக்கு விரிவான வசதி ரயில்வே அதிகாரிகள் தகவல்
ஓட்டுனர்களுக்கு விரிவான வசதி ரயில்வே அதிகாரிகள் தகவல்
ஓட்டுனர்களுக்கு விரிவான வசதி ரயில்வே அதிகாரிகள் தகவல்
ADDED : ஜூலை 09, 2024 12:15 AM
சென்னை, ரயில்கள் இயக்கத்தில் ஓட்டுனர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இவர்களுக்கு பணியை முடித்த பிறகு வழங்கப்படும் 16 மணி நேர ஓய்வு மற்றும் வார ஓய்வு மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், அவர்களின் உடல், மனநலம் பாதிக்கும் சூழல் உள்ளது. எனவே, அவர்களுக்கு பணிக்கு பிறகு, 16 மணி நேர ஓய்வை முறையாக வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதற்கிடையில், சென்னை சென்ட்ரலில் ரயில் ஓட்டுனர்கள், உதவி ஓட்டுனர் தங்கி ஓய்வு எடுப்பதற்காக, விரிவான வசதிகள் வழங்கி வருவதாக, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
ரயில்வேயின் சீரான மற்றும் பாதுகாப்பான செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் ரயில் ஓட்டும் பணியாளர்களுக்கு, அதிகபட்ச வசதிகள் வழங்கப்படுகின்றன.
ரயில் ஓட்டுனர்கள் ஓய்வெடுக்க வசதியாக 'ஏசி' அறைகள் உள்ளன. பெண் 'லோகோ பைலட்'களுக்கான சிறப்பு தங்குமிடம் வழங்கப்பட்டுள்ளது.
லோகோ பைலட்டுகளுக்கு சத்தான மற்றும் மலிவு விலையில் உணவுகள் கிடைக்கின்றன. ஊழியர்கள் தங்கள் உடல் மற்றும் மன நலனைப் பராமரிக்க உதவும் வகையில், பிரத்யேக யோகா மண்டபம் உள்ளது.
செய்தித்தாள், வார இதழ்களை படிக்க வசதியாக, வாசிப்பு அறை உள்ளது. மேலும், 'மினி ஜிம்' மற்றும் பொழுதுபோக்கு வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.