ADDED : ஜூலை 01, 2024 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:திருநங்கை, திருநம்பி, பால் புதுமையினர் உள்ளிட்டோர் இணைந்து,'வானவில்' என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
அவர்கள், தங்களைப் பற்றி புரிய வைக்கும் வகையில், ஜூன் மாதத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.
ஜூன் கடைசி ஞாயிற்றுக் கிழமையில் பேரணியை நடத்துகின்றனர். அதன்படி நேற்று, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து, பேரணியாக சென்றனர்.