ADDED : மே 26, 2024 12:21 AM
சென்னை, மேடவாக்கத்தைச் சேர்ந்தவர் சிவசங்கர். 40. இவர், நேற்று முன்தினம், தாம்பரம் போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் அளித்தார்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
என் முதல் மனைவி பிரிந்து சென்றதால், கணவரை பிரிந்து வாழும் அக்கா மகள் மகேஸ்வரியை, 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தேன்.
மகேஸ்வரிக்கு 12 வயதில் ஒரு மகள் உள்ளார். சில ஆண்டுகளாக, மகேஸ்வரி, ஆட்டோ ஓட்டுனர் செந்தில்குமார் என்பவருடன் சேர்ந்து வாழ்கிறார்.
வளர்ப்பு மகளை நான் படிக்க வைக்கிறேன். இப்போது, இருவரும் சேர்ந்து, வளர்ப்பு மகளுக்கும் ஆபாச படங்களை அனுப்பி, தவறான வழிநடத்த முயல்கின்றனர்.
இது குறித்து, பள்ளிக்கரணை போலீசில் புகார் அளித்தேன். நடவடிக்கை எடுக்கவில்லை. இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் அளித்தார். இதுகுறித்து விசாரித்த போலீசார் செந்தில் குமாரை கைது செய்தனர்.