/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரத்தின விநாயகர், துர்க்கை கோவில் ஐகோர்ட் நீதிபதி குமரேஷ் பாபு ஆய்வு
/
ரத்தின விநாயகர், துர்க்கை கோவில் ஐகோர்ட் நீதிபதி குமரேஷ் பாபு ஆய்வு
ரத்தின விநாயகர், துர்க்கை கோவில் ஐகோர்ட் நீதிபதி குமரேஷ் பாபு ஆய்வு
ரத்தின விநாயகர், துர்க்கை கோவில் ஐகோர்ட் நீதிபதி குமரேஷ் பாபு ஆய்வு
ADDED : ஆக 04, 2024 12:43 AM

சென்னை, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின், இரண்டாம் கட்ட பணிக்காக, ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையிலுள்ள ரத்தின விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் கோவில் கோபுரத்தை இடிக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மெட்ரோ பணி மற்றும் கோவில்களை நேரில் ஆய்வு செய்ய, முதல் 'பெஞ்ச்' நீதிபதி குமரேஷ் பாபு, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், மூத்த வழக்கறிஞர் எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்தது.
இதையடுத்து நேற்று, நீதிபதி குமரேஷ் பாபு, ரத்தின விநாயகர் கோவிலில் ஆய்வு செய்தார். அப்போது, எங்கெங்கு மெட்ரோ ரயில் பணி மேற்கொள்ளப்படுகிறது போன்ற விபரங்களை, அதிகாரிகள் விளக்கினர்.
கோவில் கோபுரம் நவீன தொழில் நுட்பத்தில் நகர்த்தப்பட்டு, பணி முடிந்ததும் பழைய இடத்தில் மாற்றப்படும்.
ரத்தின விநாயகர் கோவிலையும் அதே இடத்தில் கட்டித்தரவும், மெட்ரோ நிர்வாகம் தயாராக உள்ளதாக, நீதிபதியிடம் மெட்ரோ அதிகாரிகள் கூறினர். தொடர்ந்து, கோவிலின் உட்புறம் சென்று பார்வையிட்ட நீதிபதி, எதுவரை பணி மேற்கொள்ளப்பட உள்ளது என்பதை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, வழக்கு தொடர்ந்த ஆலயம் காப்போம் அமைப்பினரை கோவில் உள்ளே அனுமதிக்காததால், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, அந்த அமைப்பினர் கூறியதாவது:
கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த விசாரணையின் போது, மெட்ரோ நிறுத்தத்தை மாற்ற முடியாது என, மெட்ரோ நிர்வாகம் கூறியது.
தற்போது, கோவில் கோபுரத்தை நகர்த்தி வைத்துவிட்டு, பணி முடிந்தவுடன் மீண்டும் அதே இடத்தில் அமைத்து தருவதாக கூறுகின்றனர். ரத்தின விநாயகர் கோவிலை இடித்துவிட்டு, மீண்டும் அதே இடத்தில் கட்டித் தருவதாக கூறுகின்றனர்.
கோவிலை இடிக்காமலும், கோபுரத்தை நகர்த்தாமலும் பணிகள் மேற்கொள்ளும் வழிமுறைகளை, நீதிபதியிடம் எடுத்து உரைத்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.