/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரேஷன் அரிசி கடத்தியவர் ஏர்போர்ட்டில் கைது
/
ரேஷன் அரிசி கடத்தியவர் ஏர்போர்ட்டில் கைது
ADDED : மே 10, 2024 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னையைச் சேர்ந்தவர் குமார் முகமது கலித், 29. ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் இவரை, சிவில் சப்ளை குற்றப்பிரிவு போலீசார், தேடி வந்தனர்.
இந்நிலையில், சென்னையில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு, மலேஷிய தலைநகர் கோலாலம்பூர் செல்ல வந்த குமார் முகமது கலித் ஆவணங்களை ஆய்வு செய்தபோது, தேடப்படும் குற்றவாளி என தெரிந்தது.
அவரை, விமான நிலைய போலீசார் பிடித்து, சிவில் சப்ளை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.