/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ராயபுரம், திரு.வி.க., நகர் மண்டல துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
ராயபுரம், திரு.வி.க., நகர் மண்டல துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ராயபுரம், திரு.வி.க., நகர் மண்டல துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ராயபுரம், திரு.வி.க., நகர் மண்டல துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 21, 2024 12:34 AM

சென்னை, ராயபுரம், திரு.வி.க., நகர் மண்டலங்களில், குப்பை கையாளும் பணியை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையை, இணைப்பு பாரதிய மஸ்துார் சங்கத்தினர் நேற்று மாலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களை தனியாரிடம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
இதுகுறித்து, அச்சங்கத்தின் செயலர் புருசோத்தமன் கூறியதாவது:
மாநகராட்சி கமிஷனர் பொறுப்பேற்றதும், துாய்மை பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து, 15 மண்டலங்களிலும் தீவிர பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதற்காக, கமிஷனருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
இந்நிலையில் எவ்வித முகந்திரமும் இல்லாமல், ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களல் துப்புரவு பணிகளை தனியாரிடம் விடுவது கவலையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.
இதனால், அனைத்து தற்காலிக துாய்மை பணியாளர்களுக்கும் முழுமையாக வேலை பறிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன், 80 சதவீத துாய்மை பணியாளர்கள் பட்டியலினத்தவர்கள் என்பதால், அவர்களுக்கு செய்யும் துரோகமாக பார்க்கப்படுகிறது. எனவே, குப்பை கையாளும் பணியை, தனியாரிடம் விடுவதை மாநகராட்சி கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.