/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிரிக்கெட்டில் ரிசர்வ் வங்கி வெற்றி
/
கிரிக்கெட்டில் ரிசர்வ் வங்கி வெற்றி
ADDED : ஜூன் 02, 2024 12:29 AM
சென்னை, டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், டிவிசன் கிரிக்கெட் லீக் போட்டிகள், சென்னையில் நடந்து வருகின்றன.
நேற்று முன்தினம் நடந்த, மூன்றாவது டிவிசன் போட்டியில், ரிசர்வ் வங்கி மற்றும் நுங்கம்பாக்கம் சி.சி., அணிகள் எதிர்கொண்டன.
முதலில் பேட் செய்த, ரிசர்வ் வங்கி அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், எட்டு விக்கெட் இழப்புக்கு, 310 ரன்களை அடித்தது.
அடுத்து பேட் செய்த, நுங்கம்பாக்கம் சி.சி., அணி, 43.3 ஓவர்களில் 'ஆல் ஆவுட்' ஆகி, 209 ரன்களை மட்டுமே எடுத்தது. 101 ரன்களை வித்தியாசத்தில், ரிசர்வ் வங்கி வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில், டி.வி.எஸ்., அணி, 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழந்து 253 ரன்களை அடித்தது. அணியின் வீரர் தேஜாஸ்வரன், 116 பந்துகளில் 19 பவுண்டரி அடித்து, 103 ரன்களை எடுத்தார்.
அடுத்து களமிறங்கிய, மேக்னெட் சி.சி., அணி, 41.1 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 168 ரன்களை அடித்து ஆட்டம் இழந்தது. இதனால், 85 ரன்கள் வித்தியாசத்தில் டி.வி.எஸ்., அணி வெற்றி பெற்றது.