/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
3 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதல் சிற்றுந்து இயக்க பரிந்துரை
/
3 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதல் சிற்றுந்து இயக்க பரிந்துரை
3 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதல் சிற்றுந்து இயக்க பரிந்துரை
3 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதல் சிற்றுந்து இயக்க பரிந்துரை
ADDED : ஜூலை 12, 2024 12:43 AM
சென்னை, சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வந்து செல்ல, மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சிற்றுந்துகள்; தனியார் வேன்கள், ஆட்டோக்கள், கால்டாக்சிகள் இயக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக ஆலந்துார், கிண்டி, டி.எம்.எஸ்., அரசினர் தோட்டம், வண்ணாரப்பேட்டை, திருமங்கலம், சைதாப்பேட்டை, எழும்பூர், சென்ட்ரல் உட்பட பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், சிற்றுந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆனாலும், இந்த சிற்றுந்துகள் போதுமானதாக இல்லை. எனவே, பயணியர் தேவைக்கு ஏற்ப, கூடுதலாக சிற்றுந்துகளை இயக்க வேண்டும் என, மெட்ரோ ரயில் நிறுவனம், மாநகர போக்குவரத்து கழகத்திடம் கடிதம் வழங்கி உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
பயணியர் வசதிக்கேற்ப ஆலந்துார், கிண்டி, திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையங்களில், கூடுதல் சிற்றுந்துகளை இயக்க வேண்டும். அதேபோல், வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரயில் தடத்தில் இருந்து, கூடுதல் சிற்றுந்துகளை இயக்க வேண்டுமென, போக்குவரத்து துறைக்கு பரிந்துரை செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:
மெட்ரோ மட்டுமின்றி, பயணியர் நலச்சங்கங்கள், எம்.எல்.ஏ.,க்கள் சார்பிலும், பல்வேறு வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மாநகர போக்குவரத்துக் கழகத்தில் புதிய பேருந்துகள் வந்தவுடன், பயணியரின் தேவையை ஆய்வு செய்து, தேவையான இடங்களில் சிற்றுந்துகள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

