/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஒரு விரலில் ஹாக்கி ஸ்டிக் நிறுத்தி சாதனை முயற்சி
/
ஒரு விரலில் ஹாக்கி ஸ்டிக் நிறுத்தி சாதனை முயற்சி
ADDED : மே 13, 2024 01:58 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, திம்மசமுத்திரத்தைச் சேர்ந்தவர் அருண்குமார், 39; சாலவாக்கம் இந்தியன் வங்கி ஊழியர்.
விளையாட்டின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஹாக்கி மட்டையை, ஒரே விரலில் செங்குத்தாக நீண்ட நேரம் நேராக நிறுத்தி பேலன்ஸ் செய்யும் உலக சாதனை செய்ய முடிவு செய்தார்.
இது சம்பந்தமாக ஏற்கனவே நிகழ்த்தப்பட்ட,6 மணி நேரம் 5 நிமிடம் கின்னஸ் உலக சாதனையை முறியடிக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில், தன் சாதனை முயற்சியை நேற்று காலை 8:29 மணிக்கு துவக்கினார்.
எடை 642 கிராம் உடைய ஹாக்கி மட்டையை தொடர்ந்து 6 மணி நேரம் 35 நிமிடம் ஒரே விரலில் நேராக நிறுத்தி பேலன்ஸ் செய்தார். இதை, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற விண்ணப்பித்துள்ளார்.