ADDED : மே 13, 2024 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீலாங்கரை:நீலாங்கரையில் உள்ள சரஸ்வதி நகர் 5வது தெருவில் குளம் உள்ளது. நேற்று காலை, 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் குளத்தில் மிதந்தது. உடலில் ஆங்காங்கே காயம் இருந்தது.
திருவான்மியூர் தீயணைப்பு படையினர் உடலை மீட்டனர். நீலாங்கரை போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர். பிரேத பரிசோதனை முடிவில் கொலையா, தற்கொலையா என தெரியவரும் என, போலீசார் கூறினர்.