ADDED : ஆக 29, 2024 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சூளைமேடு பிரதான சாலையைச் சேர்ந்தவர் சந்திரமோகன், 52. பூட்டப்பட்டிருந்த அவரது வீட்டிலிருந்து, கடுமையான துர்நாற்றம் வீசியது. இது குறித்து, நேற்று அக்கம் பக்கத்தினர் சூளைமேடு போலீசில் புகார் அளித்துள்ளனர்.
போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அழுகிய நிலையில் சந்திரமோகனின் உடல் கிடந்து உள்ளது.
உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர்.