/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.23 கோடி அரசு நிலம் குன்றத்துார் அருகே மீட்பு
/
ரூ.23 கோடி அரசு நிலம் குன்றத்துார் அருகே மீட்பு
ADDED : ஜூலை 24, 2024 12:49 AM

குன்றத்துார், குன்றத்துார் அருகே, 23 கோடி ரூபாய் மதிப்புடைய, 2.87 ஏக்கர் அரசு நிலத்தை, வருவாய் துறை அதிகாரிகள் நேற்று மீட்டனர்.
குன்றத்துார் அருகே புதுப்பேடு-- - சோமங்கலம் சாலையோரம், பூந்தண்டலம் அருகே சக்திநகர் பகுதியில், அரசுக்கு சொந்தமான 2.87 ஏக்கர் நிலம் உள்ளது.
இதை, தனியார் நபர் சிலர் ஆக்கிரமித்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், கட்டுமான கற்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நடத்தி வந்தது, வருவாய் துறை அதிகாரிகளுக்கு தெரிந்தது.
இதையடுத்து, குன்றத்துார் தாசில்தார் மாலினி தலைமையில் சென்ற வருவாய் துறை அலுவலர்கள், போலீசார் பாதுகாப்புடன், ஆக்கிரமித்து கட்டப்பட்ட மதில் சுவரை, 'பொக்லைன்' இயந்திரம் வாயிலாக, இடித்து அகற்றினர்.
தொழிற்சாலைகளை அகற்ற, ஆக்கிரமிப்பாளர்களுக்கு கால அவகாசம் கொடுத்துள்ளனர்.
மீட்கப்பட்ட அரசு நிலத்தின் மதிப்பு, 23 கோடி ரூபாய் என, வருவாய் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.