/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இதய துடிப்பு நின்று உறுப்புகள் செயலிழந்த வாலிபருக்கு மறுவாழ்வு
/
இதய துடிப்பு நின்று உறுப்புகள் செயலிழந்த வாலிபருக்கு மறுவாழ்வு
இதய துடிப்பு நின்று உறுப்புகள் செயலிழந்த வாலிபருக்கு மறுவாழ்வு
இதய துடிப்பு நின்று உறுப்புகள் செயலிழந்த வாலிபருக்கு மறுவாழ்வு
ADDED : மார் 02, 2025 12:42 AM
சென்னை, இருமுறை இதயத்துடிப்பு நின்றதுடன், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் போன்ற உள் உறுப்புகள் செயலிழந்த நிலையில், அனுமதிக்கப்பட்ட 25 வயது வாலிபருக்கு, காவேரி மருத்துவமனையில் மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு டாக்டர் வெற்றிசெல்வன் கூறியதாவது:
கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இளைஞர் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவரின் சிறுநீரகம், நுரையீரல் போன்ற உள் உறுப்புகள் செயலிழக்க துவங்கின.
இருமுறை இதய துடிப்பு நின்று, மிகவும் கவலைக்கிடமான நிலைக்கு சென்றார்.
அவருக்கு, அனைத்து உயிர் காக்கும் சிகிச்சை வாயிலாக, நுரையீரல், சிறுநீரகம், இதய மற்றும் பிற உறுப்புகளின் பணிகளை செயற்கையாக வழங்கினோம்.
சுவாசம் தொடர்ந்து நடைபெற, தொண்டையில் இருந்து நேரடியாக நுரையீரலுக்கு காற்றை கொண்டு செல்லும், 'ட்ரக்கியோஸ்டோமி' அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.
டயாலிசிஸ் போன்ற சிகிச்சையால், ஒரு வாரத்தில் நோயாளியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
ஒரு மாத தீவிர சிகிச்சைக்கு பின், உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.