/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதியவருக்கு ' காவேரி ' யில் மறுவாழ்வு
/
முதியவருக்கு ' காவேரி ' யில் மறுவாழ்வு
ADDED : மார் 10, 2025 12:29 AM
சென்னை, இதயம் மற்றும் சிறுநீரகம் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட, 73 வயது முதியவருக்கு, காவேரி மருத்துவமனையில் மறு வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவமனை குழும நிர்வாக இயக்குநர் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:
இதயம், சிறுநீரக செயலிழப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட, 73 வயது முதியவர், மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கால் வீக்கம், சோர்வு, மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்புகளும் இருந்தன. அவருக்கு திறந்த நிலை அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலையில், 'டிரான்ஸ்கேட்டர் ஆர்டிக் வால்வ் ரீப்ளேஸ்மென்ட்' என்ற சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, இதய சிகிச்சை நிபுணர் ராஜாராம் அனந்தராமன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், 'டிரான்ஸ்கேட்டர் ஆர்டிக் வால்வ் ரீப்ளேஸ்மென்ட்' சிகிச்சை முறையில், அயோர்டிக் வால்வை மாற்றி, மறுவாழ்வு அளித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து டாக்டர் ராஜாராம் அனந்தராமன் கூறுகையில், ''இதயத்தின் வால்வுகள், சுவர்கள் மற்றும் அறைகளை பாதிக்கும் கட்டமைப்பு, நீண்ட காலமாக இதய மருத்துவத்திற்கு சவாலாக இருந்து வருகின்றன.
''குறிப்பாக வயதான நோயாளிகள் மற்றும் பலவித இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மிகவும் சிக்கலானதாக இருந்தது. தற்போது, டிரான்ஸ்கேட்டர் ஆர்டிக் வால்வ் ரீபளேஸ்மென்ட்' சிகிச்சை உதவியாக உள்ளது,'' என்றார்.