/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நோய் எதிர்ப்பு குறைபாடு சிறுவனுக்கு மறுவாழ்வு
/
நோய் எதிர்ப்பு குறைபாடு சிறுவனுக்கு மறுவாழ்வு
ADDED : மே 01, 2024 12:28 AM

சென்னை, நோய் எதிர்ப்பு குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு, அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, குழந்தைகளுக்கான ரத்த புற்றுநோய் பிரிவு நிபுணர்கள் ரேவதி ராஜ், ரம்யா உப்புலுாரி கூறியதாவது:
ரத்த சொந்தங்களில் திருமணம் செய்து கொள்வோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு, 'முதன்மை நோய் எதிர்ப்பு குறைபாடு' ஏற்படுகிறது.
இந்தியாவில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படும் சூழலில், இவ்வாறான பாதிப்பு இருப்பதாக, 70 முதல் 90 சதவீதம் பேருக்கு தெரிவதில்லை.
இந்நோயால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவன், அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல், இருமல் போன்றவற்றால் அவதிப்பட்டு வந்த சிறுவனுக்கு, மருத்துவமனையில் உள்ள, மேம்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, அந்நோய் பாதிப்பில் இருந்து சிறுவனுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்பு குறைபாடு கண்டறியப்பட்டாலும், உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பது அவசியம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.