/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாலவேடில் துணை சுகாதார நிலையம் கட்டுமான பணி துவங்கியதால் நிம்மதி
/
பாலவேடில் துணை சுகாதார நிலையம் கட்டுமான பணி துவங்கியதால் நிம்மதி
பாலவேடில் துணை சுகாதார நிலையம் கட்டுமான பணி துவங்கியதால் நிம்மதி
பாலவேடில் துணை சுகாதார நிலையம் கட்டுமான பணி துவங்கியதால் நிம்மதி
ADDED : மார் 07, 2025 12:24 AM

ஆவடி, :வில்லிவாக்கம் ஒன்றியம், பாலவேடு ஊராட்சியில் அரசு துணை சுகாதார நிலையம் செயல்பட்டது.
ஆலத்துார், கரலப்பாக்கம், பாண்டேஸ்வரம் மற்றும் சுற்றுப்புற பகுதிவாசிகள் என 7,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், இந்நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த துணை சுகாதார நிலையம் பாழடைந்து பூட்டப்பட்டு இருந்தது. செடி, கொடிகள் மண்டியதோடு, 'குடி'மகன்களின் மதுக்கூடமாகவும் மாறியது.
இந்நிலையம் செயல்படாததால், மேற்கண்ட பகுதிவாசிகள் 20 கி.மீ., பேருந்தில் பயணித்து, கதவூர் ஆரம்ப சுகாதார மையத்திற்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அங்கும் சில நேரங்களில், மருந்து தட்டுப்பாடு, டாக்டர் இல்லை உள்ளிட்ட பல காரணங்களால், நோயாளிகள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
இதனால், துணை சுகாதார நிலையத்தை இடித்து புதிதாக மருத்துவமனை கட்ட வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்தனர். நம் நாளிதழில் படத்துடன் கூடிய விரிவான செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, 15வது மத்திய நிதிக்குழு சுகாதார மானிய திட்டத்தின் கீழ், 41.35 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து, பழைய கட்டடம் இடித்து அகற்றப்பட்டு, அங்கு, 1,000 சதுர அடியில் துணை சுகாதார நிலையம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால், பகுதிவாசிகள் நிம்மதி அடைந்து உள்ளனர்.