/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கே.கே., நகரில் ஆக்கிரமிப்பு அகற்றம்
/
கே.கே., நகரில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : ஜூலை 02, 2024 01:20 AM

கே.கே.நகர், கே.கே.நகர் பிரதான சாலையில் இருந்த சாலையோர மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை, மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றினர்.
கோடம்பாக்கம் மண்டலம், கே.கே.நகர் 136வது வார்டில் உள்ள பிரதான சாலைகளில் நடைபாதை மற்றும் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்தன.
இதுகுறித்து, நம் நாளிதழிலும் பலமுறை செய்திகள் வெளிவந்துள்ளன. இதனால், இச்சாலைகளில் நெரிசல் நிலவி வந்தது.
இந்நிலையில், கே.கே.நகர் ராஜமன்னார் சாலை, பி.டி.ராஜன் சாலை, ராமசாமி சாலை உள்ளிட்ட சாலைகளில், மாநகராட்சி சார்பில் நேற்று, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
'பொக்லைன்' உதவியுடன், 30க்கும் மேற்பட்ட சாலையோர மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை, மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றினர். இதனால், அப்பகுதியில் சலசலப்பு நிலவியது.