/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையை ஆக்கிரமித்த வாகனங்கள் அகற்றம்
/
சாலையை ஆக்கிரமித்த வாகனங்கள் அகற்றம்
ADDED : ஆக 01, 2024 01:02 AM

நங்கநல்லுார், ஆலந்துார் மண்டலம், நங்கநல்லுார், ஆதம்பாக்கம் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து பல மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை, மாநகராட்சியினர் அகற்றினர்.
சென்னை ஆலந்துார் மண்டலம், ஆலந்துார், நங்கநல்லுார், ஆதம்பாக்கம் பகுதிகளில், சாலையை ஆக்கிரமித்து நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
அத்துடன், மாதக்கணக்கில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இது தொடர்பாக மாநகராட்சி அலுவலகம், சம்பந்தப்பட்ட வார்டு கவுன்சிலர்களுக்கு, தொடர்ந்து புகார்கள் சென்றன.
இதையடுத்து, ஆலந்துார் மண்டல உதவி கமிஷனர் சீனிவாசன் உத்தரவின்படி, மாநகராட்சி அலுவலர்கள் ஆதம்பாக்கம், நங்கநல்லுார் பகுதியில் சாலையில் நிறுத்தப்பட்ட பல கார்களை அகற்றினர்.
இத்தகவல் அறிந்து வந்த அதன் உரிமையாளர்களை, போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் வாகனங்களை இனி நிறுத்தக் கூடாது என எச்சரித்தனர்.
மேலும், பல நாட்களாக சாலையை ஆக்கிரமித்து, போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ, டெம்போ, ஐந்து கார்கள் உள்ளிட்ட வாகனங்கள், பள்ளிக்கரணையில் உள்ள மாநகராட்சி கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன.
'இந்த சாலையோர வாகனங்கள் அகற்றும் பணி, தொடர்ந்து நடத்தப்படும். இனி சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள், மாநகராட்சி கிடங்கிற்கு கொண்டு செல்லப்படும்' என, மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.