/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாழ்வாக தொங்கிய மின்கம்பிகள் சீரமைப்பு
/
தாழ்வாக தொங்கிய மின்கம்பிகள் சீரமைப்பு
ADDED : ஜூலை 13, 2024 12:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்குடி, பெருங்குடி மண்டலம், வார்டு 186க்கு உட்பட்ட புழுதிவாக்கம், சங்கரதாஸ் 2வது தெருவில், இரு மின் கம்பங்களுக்கு இடையே உள்ள மின்கம்பிகள் மிக தாழ்வாக, கைக்கு எட்டும் உயரத்தில் தொங்கியபடி இருந்தன.
தவிர, மின்கம்பமும் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டது. இதனால், பெரும் விபத்து நிகழ வாய்ப்புள்ளதாக, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, மின் ஊழியர்கள் வந்து பழைய கம்பத்தை அகற்றினர்; புதிதாக மின்கம்பம் நடப்பட்டு, மின் கம்பிகளும் சரியான உயரத்தில் இழுத்துக் கட்டப்பட்டன. இதையடுத்து, பகுதிவாசிகள் நிம்மதி அடைந்தனர்.