/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பூத்தப்பேடு பிரதான சாலையில் பாதாள சாக்கடை சீரமைப்பு
/
பூத்தப்பேடு பிரதான சாலையில் பாதாள சாக்கடை சீரமைப்பு
பூத்தப்பேடு பிரதான சாலையில் பாதாள சாக்கடை சீரமைப்பு
பூத்தப்பேடு பிரதான சாலையில் பாதாள சாக்கடை சீரமைப்பு
ADDED : ஆக 22, 2024 12:26 AM

போரூர், வளசரவாக்கம் மண்டலம், போரூர் 151வது வார்டில், பூத்தப்பேடு பிரதான சாலை உள்ளது.
மாநில நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் இருந்த இச்சாலை, தற்போது மாநகராட்சி பராமரிப்பில் உள்ளது.
இது, மவுன்ட்- பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் ராமாபுரம், வளசரவாக்கம் ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு, இச்சாலையில் பாதாள சாக்கடை அமைக்க பள்ளங்கள் தோண்டப்பட்டு, பணிகள் நடைபெற்று வந்தன. பணி முடிந்து சில மாதங்களுக்கு முன், பாதாள சாக்கடை பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
இந்நிலையில், சாலையில் பல இடங்களில், 'மெகா' பள்ளங்கள் ஏற்பட்டன. இதையடுத்து, பாதாள சாக்கடை மேல் மூடி மற்றும் குழாயை சீர் செய்யும் பணிகள், கடந்த நான்கு மாதங்களாக நடந்தன.
கடந்த ஜூன் மாதம் குடிநீர் வாரிய பணிகள் முடிக்கப்பட்டு, சாலையில் உள்ள பள்ளங்கள் மூடப்பட்டன.
தற்போது, அதே சாலையில் இன்னொரு பகுதியில் மண் சரிந்ததால், 30 மீட்டர் துாரத்திற்கு பள்ளம் தோண்டி சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், இச்சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகையில், தேர்தல் மற்றும் கோவில் திருவிழா என, பணிகள் பலமுறை தடைபட்டன. தற்போது, ஏற்கனவே அமைக்கப்பட்ட குழாய்களை மாற்றி, இரும்பு குழாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இன்னும் சில வாரங்களில், இப்பணிகள் முழுமையாக முடிக்கப்படும்' என்றனர்.