/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெருங்களத்துார், பீர்க்கன்காரணை ஏரிகளை ஆழப்படுத்த கோரிக்கை
/
பெருங்களத்துார், பீர்க்கன்காரணை ஏரிகளை ஆழப்படுத்த கோரிக்கை
பெருங்களத்துார், பீர்க்கன்காரணை ஏரிகளை ஆழப்படுத்த கோரிக்கை
பெருங்களத்துார், பீர்க்கன்காரணை ஏரிகளை ஆழப்படுத்த கோரிக்கை
ADDED : ஜூன் 01, 2024 12:20 AM

பெருங்களத்துார், புதுப்பெருங்களத்துாரில், ஏரிக்கரை பேருந்து நிறுத்தம் அருகே, ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி, பீர்க்கன்காரணை ஏரி உள்ளது.
பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியின் பெரும்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, குடியிருப்புகளாக மாறிவிட்டன.
எஞ்சியுள்ள பகுதியை, பொதுப்பணித் துறையினர் முறையாக பராமரிப்பதில்லை. பல இடங்களில், கரை சேதமடைந்தும், ஏரியில் கழிவுநீர் கலப்பதும் தொடர்கிறது. தவிர, ஏரி முழுதும் ஆகாயத்தாமரை வளர்ந்து, ஏரி இருப்பதே தெரியவில்லை.
அதேபோல், பெருங்களத்துார் ஏரியும், கழிவுநீர் தேக்கமாகவும், ஆகாயத்தாமரையாலும் மூடப்பட்டுள்ளது. இந்த ஏரியில், ஆக்கிரமிப்பும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
தொடர்ந்து கண்டுகொள்ளாமல் விட்டால், இரு ஏரிகளும் இருந்த அடையாளமே தெரியாமல் போய்விடும். அதனால், இரு ஏரிகளையும் துார்வாரி, ஆழப்படுத்தி, கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என, குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.