/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏரி ஓரம் கழிவுநீர் கிணறு வேறு இடம் மாற்ற கோரிக்கை
/
ஏரி ஓரம் கழிவுநீர் கிணறு வேறு இடம் மாற்ற கோரிக்கை
ADDED : ஜூலை 01, 2024 02:00 AM

மடிப்பாக்கம்:பெருங்குடி மண்டலம், வார்டு 187க்கு உட்பட்ட மடிப்பாக்கத்தில், 141 தெருக்கள் உள்ளன. இங்கு 2022ல் பாதாள சாக்கடை பணிகள் துவக்கப்பட்டு, 122 தெருக்களில் பணிகள் முடிந்துள்ளன.
இந்நிலையில், வீடுகளிலிருந்து குழாய்கள் வழியாக வந்து சேரும் கழிவுநீர், அய்யப்பா நகர் ஏரி ஓரமாக, 50 அடி ஆழம் உள்ள கிணற்றில் சேமிக்கப்பட்டு, அங்கிருந்து குழாய் வழியாக உந்தப்பட்டு, கழிவுநீர் சுத்திகரிப்பு இடத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது.
இந்த கிணற்றில் தேங்கும் கழிவுகளால் நிலத்தடி நீர் மாறி, நாளடைவில் ஏரியில் உள்ள நன்னீர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
எனவே, ஏரி அருகே அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் தேக்கக் கிணற்றை வேறு இடத்தில் அமைக்கும்படி, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள் புகார் எழுப்பி உள்ளனர்.