/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொளப்பாக்கம் குளம் சீரமைக்க வேண்டுகோள்
/
கொளப்பாக்கம் குளம் சீரமைக்க வேண்டுகோள்
ADDED : ஆக 29, 2024 12:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார் அருகே கொளப்பாக்கத்தில், சாமியார் குளம் உள்ளது. பராமரிப்பின்றி, படுமோசமாக இருந்த இந்த குளத்தை, தனியார் அறக்கட்டளை, தன்னார்வலர்கள், பொதுமக்கள் இணைந்து 2021ல் சீரமைத்தனர். சுற்றுச்சுவர், நடைபாதை, படிக்கட்டுகள் அமைத்தனர். குளத்தை சுற்றி பொதுமக்கள் நடைபயிற்சி செய்து பயனடைந்தனர்.
தற்போது இந்த குளத்து நீரில் ஆகாயத்தாமரை செடிகள் மண்டியும், படிக்கட்டுகள் உடைந்தும் காணப்படுகிறது; மதுக்கூடமாக மாறி வருகிறது. இந்த குளத்தை சீரமைத்து பராமரிக்க வேண்டும்.
-என்.சந்திரசேகர், கொளப்பாக்கம்.