/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொது கழிப்பறையை சீரமைக்க கோரிக்கை
/
பொது கழிப்பறையை சீரமைக்க கோரிக்கை
ADDED : மே 28, 2024 12:23 AM
திருவொற்றியூர், எல்லையம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே, மாநகராட்சி வணிக வளாகம் செயல்படுகிறது. இங்கு, தாசில்தார் அலுவலகம், உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மண்டல அலுவலகம்.
தனியார் வங்கி, ஏ.டி.எம்., தனியார் பல் மருத்துவமனை, கல்வி நிலையம், ஜெராக்ஸ் கடை, இ -- சேவை -மையம் உள்ளிட்டவை செயல்படுகின்றன.
தினசரி நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் இங்கு, முதியோர் உதவித்தொகைக்காக ஏராளமான முதியோர் வருவர். இந்த வளாகத்தில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உள்ள பொதுக்கழிப்பறை, மின்மோட்டார் பழுதால் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.
மேலும், கடும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.விவேக், 43, திருவொற்றியூர்.