/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடிநீர் வாரியத்தில் காலி பணியிடம் நிரப்ப கோரிக்கை
/
குடிநீர் வாரியத்தில் காலி பணியிடம் நிரப்ப கோரிக்கை
குடிநீர் வாரியத்தில் காலி பணியிடம் நிரப்ப கோரிக்கை
குடிநீர் வாரியத்தில் காலி பணியிடம் நிரப்ப கோரிக்கை
ADDED : ஜூலை 22, 2024 01:37 AM
சென்னை:தமிழ்நாடு குடிநீர், வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்கத்தின் சென்னை கோட்டத்தின், 13வது பேரவை கூட்டம், வேளச்சேரியில் நேற்று நடந்தது.
இச்சங்கத்தில், 1,542 பேர் உள்ளனர். இதில், 80 வயதுக்கும் மேற்பட்ட 20 பேர் கவுரவிக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளாக, ஒன்பது பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
சங்கத்தினர் விடுத்த கோரிக்கைகள்:
தமிழகத்தில் இரண்டாவது பெரிய வாரிய துறையான குடிநீர் வடிகால் வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
அகவிலைபடியை அரசு அறிவித்த நாளில் இருந்து வழங்காமல், வெவ்வேறு தேதியில் வழங்க உத்தரவிட்டதை சரி செய்ய வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளால் செயல்படுத்தப்படும் குடிநீர், கழிவுநீர் திட்டத்தை, வாரியம் செயல்படுத்தும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
தலைமை பொறியாளர்களுக்கு நேர்முக உதவியாளர் நியமிக்கும்போது, தொழில்நுட்பம் தெரிந்தவர்களை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு கோரிக்கை வைத்தனர்.

