/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பூந்தமல்லியில் பூங்கா பராமரிக்க கோரிக்கை
/
பூந்தமல்லியில் பூங்கா பராமரிக்க கோரிக்கை
ADDED : மே 20, 2024 01:38 AM

பூந்தமல்லி:பூந்தமல்லி நகராட்சி, 11வது வார்டு நண்பர்கள் நகரில், 1.35 ஏக்கர் பரப்பளவில் பூங்கா உள்ளது. முதியோர், பெண்கள், சிறுவர்கள் என பலர் பொழுதுபோக்கவும், உடற்பயிற்சி செய்யவும் காலை, மாலை நேரங்களில் வருகின்றனர்.
இந்த பூங்காவை, நகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிப்பது இல்லை. பூங்காவின் உள்ளே பல இடங்களில் செடிகள் வளர்ந்துள்ளன. இதில், பூச்சி, பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் தஞ்சமடைந்து, பூங்காவினுள் வலம் வருவதால், குழந்தைகளுடன் பூங்காவுக்கு செல்லும் பெற்றோர் அச்சமடைகின்றனர். பூங்காவில் உள்ள விளையாட்டு மற்றும் பயிற்சி உபகரணங்கள் துருப்பிடித்துள்ளன.
பூந்தமல்லி நகராட்சி நிர்வாகத்தினர், பூங்காவை முறையாக பராமரிக்க, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

