/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குன்றத்துார்-- - படப்பை இடையே அரசு பேருந்து இயக்க கோரிக்கை
/
குன்றத்துார்-- - படப்பை இடையே அரசு பேருந்து இயக்க கோரிக்கை
குன்றத்துார்-- - படப்பை இடையே அரசு பேருந்து இயக்க கோரிக்கை
குன்றத்துார்-- - படப்பை இடையே அரசு பேருந்து இயக்க கோரிக்கை
ADDED : மே 29, 2024 12:28 AM
குன்றத்துார், குன்றத்துார் ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன. குன்றத்துார் ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் படப்பையில் உள்ளது. அதேபோல், குன்றத்துாரில் தாலுகா
அலுவலகம் உள்ளது.
இந்த இரு அலுவலகத்திற்கும் அரசின் நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணப்பிக்கவும், பெறவும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், குன்றத்துார்-- - படப்பை இடையே நேரடி அரசு பேருந்து வசதி இல்லை. இதனால், படப்பையை சுற்றியுள்ள கிராம மக்கள் தாம்பரம் சென்று, அங்கிருந்து குன்றத்துார் செல்ல வேண்டியுள்ளது. குன்றத்துாரைச் சுற்றிஉள்ள மக்களும் தாம்பரம் சென்று, அங்கிருந்து படப்பைக்கு செல்ல வேண்டிஉள்ளது.
இதனால் நேரமும், பணமும் விரயமாகிறது. எனவே, குன்றத்துார்-- - படப்பை இடையே பூந்தண்டலம், சோமங்கலம், நடுவீரப்பட்டு, மணிமங்கலம் வழியே அரசு பேருந்து இயக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.