/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மணலியை பிரிக்காதீர் முதல்வருக்கு கோரிக்கை
/
மணலியை பிரிக்காதீர் முதல்வருக்கு கோரிக்கை
ADDED : மார் 11, 2025 12:56 AM
மணலி,சென்னை மாநகராட்சி, மணலி மண்டலத்தில் எட்டு வார்டுகள் உள்ளன. இதில், மணலி மண்டலம் கலைக்கப்பட்டு, ஐந்து வார்டுகள் திருவொற்றியூர் மண்டலத்திலும், மூன்று வார்டுகள் மாதவரம் மண்டலத்திலும் சேர்க்கப்படுவதாக, அரசாணை வெளியானது.
இதற்கு, அ.தி.மு.க., காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் ஊர் நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், மணலி சேக்காடு பொது வியாபாரி சங்கம் சார்பில், தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
அதில், குடிநீர், பாதாள சாக்கடை, கழிவு நீர் இணைப்பு, சாலை வசதி, தெருவிளக்கு போன்ற பல்வேறு வசதிகள் மணலி மண்டலத்தில் செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர வேண்டுமானால், மணலி மண்டலத்தை பிரிக்கக் கூடாது. பிரிக்கும் பட்சத்தில் வளர்ச்சி பணிகளில் தொய்வு ஏற்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.