/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயிலில் கஞ்சா கடத்திய வாலிபருக்கு 'காப்பு'
/
ரயிலில் கஞ்சா கடத்திய வாலிபருக்கு 'காப்பு'
ADDED : ஜூன் 27, 2024 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, மேற்கு வங்கம் மாநிலம் ஹவுராவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு கோரமண்டல் விரைவு ரயில் நேற்று முன்தினம் வந்தது. அதில் வந்த பயணியரை ரயில்வே போலீசார் கண்காணித்தனர். அதில், ஒரு பயணி மீது சந்தேகம் ஏற்பட்டு, சோதித்த போது, அவரது பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.
விசாரணையில், அவர், மேற்கு வங்கம் மாநிலம் முர்ஜிதபாத் பகுதியைச் சேர்ந்த ராணா மண்டல், 25, என்பதும், ஒடிசா மாநிலம்புவனேஸ்வரில் இருந்து ரயிலில், 6 கிலோ கஞ்சா பொட்டலங்களை கடத்தியதும் தெரியவந்தது. இதன் மதிப்பு, 1.20 லட்சம்ரூபாய். கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை போலீசார் கைது செய்தனர்.